லியோ பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே அந்த படம் தொடர்பான ஏதோ ஒரு ஹேஷ்டேக் எக்ஸ் பக்கத்தில், ஊடகங்களில் டிரெண்டிங் ஆகி இடம்பெற்று கொண்டிருந்தது.
தினசரி லியோ படம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகும் வகையில் லியோ படத்திற்காக தயாரிப்பு தரப்பில் நியமிக்கப்பட்ட சமூகவலைதள படையினர் பணியாற்றி வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக் வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள், 2வது சிங்கிள், 3வது சிங்கிள், டிரெய்லர், இசை வெளியீட்டு விழா என லியோ ஹேஷ்டேக் முதலிடத்தில் இருந்தது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போனபோதும் கூட விஜய் ரசிகர்கள் அரசுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.
இந்நிலையில்தான், இசையமைப்பாளர் டி.இமான் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இனிமேல் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் கூட அவருடன் இணையமாட்டேன் என சொல்லியிருந்தார்.
அதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இதற்கு மேல் இதைப்பற்றி பேசமாட்டேன் எனவும் அவர் சொன்னதால் அவரின் விவாகரத்துக்கே சிவகார்த்திகேயன் தான் காரணமா என்கிற சந்தேகம் பொதுவெளியில் விவாதப்பொருளானது.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக உள்ள லியோ படத்தின் அதிகாலை காட்சி அனுமதிக்கு நீதிமன்றத்தில் வழக்கு, தீர்ப்பு, ஆந்திராவில் லியோ படத்தை திரையிட நீதிமன்றம் தடை, தமிழ்நாட்டில் திரையரங்குகளில் லியோ படத்தை திரையிட ஒப்பந்தம் செய்வதில் சதவீத பிரச்சினை என ஒட்டுமொத்த ஊடக கவனமும் லியோ படத்தின் மீதே இருந்தது.
அதனால் நேற்று காலை முதல் #LeoFDFS #LeoBookingsUpdate #Thalapathy என பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஹேஷ்டேக் அது எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி நேற்றைய தினம் டிரெண்ட்டிங்கில் சிவகார்த்திகேயன் மீதான இமான் பேட்டி முதலிடத்தை பிடித்துவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்: இஸ்ரேலின் வெறித்தனம்!
‘ஜெய் ஸ்ரீ ராம்’ சர்ச்சை: பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!