இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து , சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் திரைவாழ்விலேயே அதிக வசூல் படைத்துள்ள ‘அமரன்’ திரைப்படம் ஏறத்தாழ ரூ.200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
விமர்சனரீதியாகவும் நிறைய பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் பின்னணி இசையின் முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக ‘ஹே மின்னலே’, ‘வெண்ணிலவு சாரல்’ , ‘உயிரே’, ‘ஆஸாதி’ ஆகிய பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இந்தப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உயர் ரக வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த தீபாவளிக்கு வெளியான ‘அமரன்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு ஜீவிபிரகாஷ் தான் இசையமைப்பாளர். ‘அமரன்’ போலவே துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் இரட்டை சந்தோஷம் அடைந்துள்ள ஜீவி பிரகாஷுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் சிவகார்த்திகேயன் தற்போது இந்த உயர் ரக வாட்சைப் பரிசளித்துள்ளார்.
இந்தப் பரிசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த வாட்ச்சின் புகைப்படத்தைப் பதிவிட்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நயன்தாராவின் ’நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ : ட்ரெய்லர் வெளியானது!
ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ ! : ரிலீஸ் தேதி அறிவிப்பு