லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் “The Greatest of All Time” (The GOAT) என்ற Sci Fi ஆக்சன் படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல பிரபங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
சென்னை, கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடந்து The GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “விசில் போடு” பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தி மறைந்த பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவத்தை வடிவமைத்து கேமியோ ரோலில் நடிக்க வைக்க படக் குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் அவர்களை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The GOAT படத்தின் இறுதி காட்சியில் 15 நிமிடங்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு தகவல் வெளியானதில் இருந்தே The GOAT படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு The GOAT படத்தின் செகண்ட் சிங்கள் அல்லது Glimpse வீடியோ வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையில் பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்
ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?