சிவகார்த்திகேயன் பிறந்த நாள்… வெளியான மதராஸி டீசர்!

Published On:

| By Kumaresan M

கடந்த தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’, திரைக்கு வந்தது. இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அமைந்து. கடந்த பிப்ரவரி 14ம் தேதி இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், தனது 25வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார். இந்த படத்துக்கு பராசக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த தினத்தில் ஏராளமான நடிகர்கள் , நண்பர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் சுதா கொங்கராவும் பராசக்தி படத்தின் மேக்கிங் காட்சிகளை வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு வீடியோ ஒன்று வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனும் வாழ்த்து கூறியிருக்கிறார்.

பிறந்த நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் மதராஸி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இது சிவார்த்திகேயனின் 23வது படமாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share