சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள படம் அயலான். இந்த படத்தின் புரோமோஷனுக்காக தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டிகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் இன்டர்வியூவில் பேசிய சிவா அயலான் படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். மேலும், தனது நண்பரும் இயக்குனருமான அட்லீ குறித்து பேசிய சிவா, “அட்லீயை நாம் கொண்டாட வேண்டும்” என்று கூறினார்.
அந்த பேட்டியில் சிவா பேசியதாவது, “ஜவான் படத்தின் ட்ரெய்லரை பார்த்த உடன் இந்த படம் டைனோசர் டா.. இது மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று மெசேஜ் செய்தேன். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிக்கு சென்று ஷாருக்கான் போன்ற மிக பெரிய ஹீரோவை இயக்குவதும், அந்த படம் 1,200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்வதும் சாதாரண விஷயம் இல்லை.
ஹிந்தியில் உள்ள இயக்குனர்களாலேயே அதை செய்ய முடியவில்லை. ஹிந்தியில் அட்லீயை கொண்டாடுகிறார்கள். ஆனால் இங்கு அட்லீயை தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். தற்போது அட்லீ ஹிந்தி சினிமாவிற்கு சென்று விட்டார். இங்கு தமிழ் சினிமாவில் ஒரு Commerical இயக்குனரை நாம் தவறவிட்டு விட்டோம்.
தளபதி விஜய்யுடன் அட்லீ இணையும் போது அந்த படத்தின் வெற்றி, வசூல், படத்திற்கு தேவையான என்டர்டெயின்மென்ட் என எல்லாமே வேற லெவல். ஒரு புறம் அட்லீ தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் அவர் கொண்டாடப்படுகிறார். நாமும் அட்லீயை கொண்டாட வேண்டும்” என்று சிவா கூறினார்.
சினிமாவிற்கு வருவதற்கு முன் அட்லீ இயக்கிய முகப்புத்தகம் என்ற குறும்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!
இந்தியாவில் 7 கோடி வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்…என்ன காரணம்?