நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை இருவருமே தற்போது உறுதிப்படுத்தி உள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் நாளை (அக்டோபர் 20 ) திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அனுதீப் இயக்கி உள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ’ ஜாதி ரத்னலு ‘படத்தை இயக்கியவர் அனுதீப் ஆவார். பிரின்ஸ் படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்கிற வெளிநாட்டு நடிகை நடித்துள்ளார்.
பிரின்ஸ் படத்தின் ரிலீசை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
ரசிகர்கள் #AskSK என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி கேட்கும் கேள்விகளுக்கு வீடியோ வாயிலாக பதிலளித்து அதனை ட்விட்டரில் பதிவிட்டார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் மாநாடு படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம் என கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “ஷூட்டிங் எப்போ வேணாலும் போலாம் சார். ஆனா இந்த கதை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்” என கேட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார். இதற்கான சூசக அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பதால் அவரை கலாய்ப்பதற்காகவே பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன் என கேட்டுள்ளார் சிவா.
சிவகார்த்திகேயன் கதை கேட்டதற்கு, வடிவேலு மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இவர்கள் இருவர் இடையேயான ட்விட்டர் கலாட்டா ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும், சினிமா வந்த அப்புறம் ஏண்டா வந்தோம் நினைச்சி இருக்கீங்களா !? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு
‘’இடையூறுகள் நெறய இருந்துருக்கு அது இனிமேலும் இருக்கும்..ஆனால் உங்களோட அன்பும், ஆதரவும் அதிகளவு கிடைக்கும் போது..அதை வச்சிட்டு இன்னும் முன்னேறி ஓடனும்னு தோணும்” என்று கலகலவென பதிலளித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தீபாவளி: சர்தார், பிரின்ஸ் முன்பதிவு மந்தம்- பொன்னியின் செல்வன் எஃபெக்ட்!