பாடகி சுசித்ரா சின்னதாமரை பாடல் உட்பட சுமார் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக சுசித்ரா மீடியாக்களிடம் கூறும் கருத்துகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவரது முன்னாள் கணவர் கார்த்திக் பற்றி சுசித்ரா கூறிய தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். தொடர்ந்து, சுசித்ராவின் வாய்க்கு பூட்டு போடும் வகையில் கார்த்திக் பற்றி பேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், மும்பையில் இருந்து கடந்த 86 ஆண்டுகளாக மாதம் 15 நாட்களுக்கு ஒரு முறை வெளி வரும் , குழந்தைகள் இதழில் பணியாற்றும் வாய்ப்பு பாடகி சுசித்ராவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, மும்பைக்கு இடம் பெறவுள்ளதாக தனது பதிவு வாயிலாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, ”இந்த இதழ் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. மிகுந்த கவுரவத்துக்குரிய இந்த பணி கிடைத்ததற்காக என்னை வாழ்த்துங்கள்.
இனிமேல் நான் பப்ளிக் மீடியா ஃபிகர் அல்ல. எனவே, இனிமேல் யூடியூப்பில் வீடியோ வெளியிட மாட்டேன். ஏற்கனவே, வெளியிட்ட வீடியோக்கள் அப்படியே இருக்கும். என்னை வெறுப்பவர்கள் வேறோரு யூடியூப் பிரபலங்கள், பாடகர்கள், பாவம் பைத்தியங்களை தேடிக் கொள்ளுங்கள். நான் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மையானவை. எனது கண்ட்ரோலை இழக்காமல் அனைத்தையும் வெளிப்படையாக பேசியுள்ளேன் ”என்று கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பல பிரபலங்களையும் பற்றி தாறுமாறாக பேசியுள்ள சுசித்ரா, கவிஞர் வைரமுத்து மீதும் பாலியல் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஓ.எம்.ஆர் சாலையில் 2 மணி நேரத்தில் தண்ணீர் அகற்றம் : எ.வ.வேலு விளக்கம்!