பின்னணி பாடகர் அமரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பூர்வீக கிராமமான கோணேட்டம் பேட்டையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பருவத்தில் பாடகர், அமரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிலகாலம் வாழ்ந்த கிராமம் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கோணேட்டம் பேட்டை கிராமம்.இக்கிராமத்தில் தான், அவரது குடும்பத்தினரின் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவுகளை போற்றும் வகையில், அவரது சிலையை அமைக்கும் பணியை அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.
நான்கு அடிகள் உயரம் கொண்ட எஸ்.பி.பி கற்சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், குடும்ப உறவுகள் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சியில் நேற்று (ஆகஸ்ட் 9) திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரி, அவரது தங்கையும் திரைப்பட பின்னணி பாடகியுமான எஸ்.பி. சைலஜா, அவரது கணவர் சுதாகர், உறவினர் பானுமூர்த்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், கிராமத்தினர்பொதுமக்கள் பங்கேற்றனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எஸ்சி எஸ்டி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்… ஆகஸ்ட்- 13-ல் விசிக ஆர்ப்பாட்டம்!
ஐமேக்ஸ் திரைகளில் ‘கோட்’ ரிலீஸ்… விஜய் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி!