நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்தை விமர்சித்தவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி சின்மயி பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படத்தின் ரீமேக் படமாக தமிழில் இப்படம் தயாராகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி படக்குழுவினர் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,
”கடவுள் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரை ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை. எந்த கடவுளுமே இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும், இவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை.
அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறதா என சொல்லுங்கள் பார்ப்போம். சபரிமலை என்று கிடையாது. வேறு எந்த கோயிலிலும் கடவுள் இது செய்யக் கூடாது, இப்படி செய்யக் கூடாது , இது சாப்பிடக் கூடாது, தீட்டு என்று எந்த சட்டத்தையும் வைக்கவில்லை.
எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது.மாதவிடாய் காலங்களில் தீட்டு, கீட்டு என்கிறார்கள். அதெல்லாம் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள். அதையும் நம்புகிறார்கள். எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை” என்று பேசியிருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேச்சு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பலர் இவரது கருத்துகளை விமர்சித்தும் வந்தனர். அந்த வகையில், ராகேஷ் என்ற ட்விட்டர் பயனாளி ஒருவர், “ஆண் பெண் வித்தியாசம் இல்லையா ஐஸ்வர்யா ராஜேஷ்…! நான் சட்டை போடாம வெளிய வருவேன் நீயும் வருவியா…?” என்று பதிவிட்டிருந்தார்.
அவருடைய இந்த பதிவிற்குப் பாடகி சின்மயி பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”எந்த அறிவிலி இந்த ‘நான் சட்ட போடாம வருவேன் நீயும் வருவியா’ன்னு முதல்ல ஆரம்பிச்சானோ அவன பிடிச்சு கிளாஸ் எடுக்கணும்.
ஒரு நச்சு ஆணாதிக்க சமூகம் ஆண்களின் பார்வைக்காக பெண்களின் பாலூட்டி சுரப்பிகளை பாலுறவுபடுத்துகிறது, இந்த துப்பட்டா போடுங்க டோலி கும்பல் துள்ளிக்குதித்துக்கொண்டே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மோனிஷா
தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலோர மாவட்டங்களில் மழை!
அடே அயோக்கியா!
தாராளமாக அப்படிப் பெண்கள் வரலாம். ஆனால், அப்படி வருவதற்கு ஆண்களாகிய நீங்கள் இன்னும் யோக்கியமாகவில்லை… உன்னைப் போன்ற ஆண்கள் இருக்கும் வீட்டில் உங்கள் அம்மாக்கள் கூட சூதானமாகத்தான் உடைய அணிய வேண்டும்!
Super
வைரம் பாய்ந்த உடம்பு
Misleading headline.