singer bhavatharini songs viral

Video: தந்தை, சகோதரர்களுடன் சிரித்துப்பேசும் பவதாரிணி

சினிமா

கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று(ஜனவரி 25) இலங்கையில் இறந்த பாடகி பவதாரிணியின் உடல் தற்போது சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இலங்கையில் இருந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் U 127 என்ற விமானம் மூலம் பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து திநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் இன்றிரவு (ஜனவரி 26) தேனி பண்ணைப்புரத்திற்கு பவதாரிணியின் உடல் எடுத்து செல்லப்பட்டு, அங்கு  நாளை (ஜனவரி 27) அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கிடையில் பவதாரிணியின் பாடல்கள் அவரது பேட்டிகள் ஆகியவை, சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றன.

குறிப்பாக விழா மேடையொன்றில் முதன்முறையாக இளையராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய நால்வரும் இணைந்து சிரித்துப்பேசும் வீடியோக்களை, ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல ‘யாத்தே யாத்தே’ பாடலை எப்படி பாட வேண்டும் என்பதை இளையராஜா, பவதாரிணிக்கு சொல்லி கொடுக்கும் வீடியோவும் காண்பவர்களை உருக வைப்பதாக உள்ளது.

ஒரே மேடையில் தந்தையுடன் அமர்ந்து ‘கண்ணின் கருமணியே’ பாடலைப் பாடும் பவதாரிணி ஒருகட்டத்தில் பாட முடியாமல் திணற, அவரை தட்டிக்கொடுத்து ராஜா பாட வைக்கிறார். தொடர்ந்து இருவரும் இணைந்து அப்பாடலை பாடுகின்றனர்

இதுதவிர பவதாரிணி பாடிய பாடல்களை தொகுத்தும் தங்களது வருத்தத்தினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் #RIPBhavatharini என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் மாளிகை திடீர் அழைப்பு!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *