சத்யராஜுடன் சரிசமமாக நடிக்க ஆசை… விஜய் சேதுபதி ஓபன் டாக்!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தின் டிரைலர் லான்ச் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், ஜான் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி இந்த விழாவிற்கு வருகை தந்திருந்தார்.

அப்போது மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, சிங்கப்பூர் சலூன் படக் குழுவினரையும் இயக்குனர் கோகுலையும் பாராட்டி பேசினார்.

அதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் குறித்து பேசிய விஜய் சேதுபதி,”நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நான் உங்களை மிகவும் ரசிப்பேன். உங்களின் திறமை குறித்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நடிகனாக உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களுடன் சரிக்கு சமமாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன். அந்த படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக இல்லாமல், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று விஜய் சேதுபதி கூறினார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரெய்லர் சொல்வதென்ன?

மோடி வருகை : சென்னை போக்குவரத்து அதிரடி மாற்றம்!

வேலைவாய்ப்பு : உயர் நீதிமன்றத்தில் பணி!

பொதுப் பயன்பாட்டு மின்கட்டணத்தை எப்போது குறைப்பீர்கள்? : அன்புமணி

டி 2௦ உலகக்கோப்பையால் தொடங்கிய புதிய தலைவலி… இப்போ என்ன பண்றது?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts