இயக்குநர் மணி ரத்னம், நடிகர் கமல் ஹாசன் கூட்டணியில் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் தக் லைஃப்.
இந்த படத்தில் கமல் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ஒரு கேங்ஸ்டர் ஆக்சன் கதைக்களத்தில் தக் லைஃப் படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் இந்த படத்திற்காக படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், இன்று (மே 8) தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்புவின் அறிமுக வீடியோவை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு Border Patrol காரை நடிகர் சிம்பு வேகமாக ஓட்டி செல்ல, அவர் காருக்கு பின்னே 2 கார்கள் சிம்புவின் காரை சேஸ் செய்கிறது. திடீரென சிம்பு தனது காரில் Drift அடித்து, துப்பாக்கியை எடுத்து தனது எதிரிகளை நோக்கி மாஸாக சுடுவது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.
தக் லைஃப் படத்தில் நடிகர் கமலின் மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்காக நீளமாக முடி மற்றும் தாடி என வித்தியாசமான கெட்டப்பில் இருந்த சிம்பு தற்போது தக் லைஃப் படத்திற்காக தாடி, மீசையை ட்ரிம் செய்து விட்டார்.
தக் லைஃப் படத்தின் தொடக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் கால்ஷீட் பிரச்சனை காரணத்தினால் இருவரும் படத்தில் இருந்து விலக தற்போது சிம்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
விழுப்புரம் ஸ்டிராங் ரூமில் சிசிடிவி மீண்டும் பழுது : ஆட்சியர் விளக்கம்!
மியூசிக் டைரக்டர் பெயர் இல்லாத அதர்வாவின் “DNA” ஃபர்ஸ்ட் லுக்..!