ரூ.40 கோடி சம்பளம் கேட்கும் சிம்பு

கௌதம்மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்தப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து சிலம்பரசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் பத்துதல. அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன இப்படத்தைத் தொடர்ந்து சிலம்பரசன் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

மாநாடு படத்தின் வெற்றி சிலம்பரசன் சந்தை மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்று அவரது குடும்பம் கருதுகிறது.

அதனால் சிலம்பரசன் நாயகனாக நடிக்க தன் சம்பளம் 40கோடி ரூபாய் என்று சொல்கிறாராம். அவ்வளவு சம்பளம் கொடுத்தால் லாபம் கிடைக்காது என்பது தயாரிப்பாளர்களின் தயக்கம்.

அதனால்தான் புதிய படங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதேசமயம், மாநாடு போல் வெந்து தணிந்தது காடு படமும் பெரிய வெற்றியைப் பெறும். அப்படம் வெற்றி பெற்ற பின்பு சிலம்பரசன் வணிக மதிப்பும், இயல்பாகவே சம்பளமும் உயர்ந்துவிடும்.

எனவே தான் இப்போது அவசரப்பட்டு புதிய படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்கிற முடிவில் சிலம்பரசன் குடும்பம் இருக்கிறது என்று அவரது தரப்பில் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் விசாரித்தால், “ராமராஜன் திரையுலக வாழ்க்கையைப் பார்த்தும் இங்கு எந்த கதாநாயகனும் திருந்தியதாக வரலாறு இல்லை. முந்தையை படத்தின் வெற்றி அந்த நடிகர் நடிக்கும் அடுத்த படத்தின் வியாபாரத்தைத் தீர்மானிக்கும்.ஆனால் திரையரங்குகளில் அந்தப்படம் வெளியாகும்போது வசூலைத் தீர்மானிக்காது. இதனை இங்குள்ள கதாநாயகர்கள் இதுவரை புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ மறுக்கிறார்கள். விஜயகாந்த் நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியான வானத்தைப் போல படத்தின் வெற்றி “வல்லரசு”வியாபாரத்தை அதிகப்படுத்தியது. அடுத்து வந்த சிம்மாசனம், பேரரசு படங்கள் அதிகபட்ச விலை கொடுத்து வாங்கினார்கள் இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் தோல்வி.இது எல்லா கதாநாயகர்களுக்கும் பொருந்தும். அதனை புரிந்துகொள்ளாததன் விளைவைத் தமிழ் சினிமா அனுபவித்து வருகிறது.எந்த ஹீரோ நடிக்கும் படத்தையும் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கப் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காட்டிலும் விரும்பவில்லை என்பதே உண்மை” என்கின்றனர்.

இராமானுஜம்

வெந்து தணிந்தது காடு: சிம்பு ரசிகர்களுக்கு ரகுமான் கொடுக்கும் ட்ரீட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts