புதிய அவதாரம் : பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி அளித்த சிம்பு!

Published On:

| By christopher

Simbu as producer in str 50

நடிகர் சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தனது 50-வது படத்தின் தயாரிப்பாளர் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். Simbu as producer in str 50

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ போன்ற படங்களின் தொடர் தோல்வியால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் சிலம்பரசன்.

ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தன்னை மெருகேற்றி ’ஈஸ்வரன்’, ’மாநாடு, வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் மாஸ் கம்பேக் கொடுத்தார்.

கடந்த 2023-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ திரைப்படம் வெற்றிபெற்றது. ஆனால் அதன்பிறகு 2 ஆண்டுகளாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சிம்பு ரசிகர்கள் கவலையடைந்தனர்.

இந்த நிலையில் சிம்புவின் 42வது பிறந்தநாளான இன்று, அவரது 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது 50வது படம் குறித்து எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

தயாரிப்பாளர் ஆனார் சிம்பு Simbu as producer in str 50

இதற்கிடையே Ātman Cine Arts என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக சிம்பு இன்று காலை அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து, சிம்புவின் 50-வது படமாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “இறைவனுக்கு நன்றி!

அட்மன் சினி ஆர்ட்ஸ் உடன் ஒரு தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனக்கும், தேசிங்கு பெரியசாமிக்கும் ஒரு கனவுத் திட்டமான எனது 50வது படத்துடன், எனது தயாரிப்பை தொடங்குவதை விட சிறந்த வழி எதுவுமில்லை.

இந்தப் புதிய முயற்சிக்காக உற்சாகமாக இருக்கிறேன், எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் உண்மையிலேயே எதிர்பார்க்கிறேன். நீங்க இல்லாம நான் இல்ல” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share