ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தக் லைஃப். 36 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்தினமும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
படத்தின் டைட்டில் கார்டே ஒரு வித்தியாசமான வீடியோவுடன் தான் வெளியானது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் தோன்றிய கமல்ஹாசன் பேசிய ஒவ்வொரு வசனங்களும் கவனம் ஈர்த்தன.
ஆரம்பத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, நாசர், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இதற்கிடையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனால் படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் திரைப்படத்தைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கால்ஷீட் பிரச்சனையால் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதில் நடிகர் சிம்பு களம் இறங்குவது உறுதியாம்.
சமீப காலமாகவே நடிகர் சிம்புவிற்கு ஏறுமுகம் தான். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளது, எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
மேலும் நடிகர் ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அரவிந்த் சாமியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இத்தனை சவரன் ‘நகையோட’ தான் கல்யாணம் பண்ணேன்… ஓபனாக சொன்ன அனிதா சம்பத்!
உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரம்… யார் இந்த ஈரோடு பிரகாஷ்?
Video: சங்கடத்தில் ‘தவித்த’ பிரியாமணி… போனி கபூரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!