யுவன் இசை நிகழ்ச்சி: தெறிக்கவிட்ட சிம்பு… VIBE செய்த ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தனது பட வேலைகளுக்கு இடையே பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி ரசிகர்களை தனது இசையால் கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஹை ஆன் யுவன் (High on U1) இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் ஆகியோர் பெரும் பொருட்செலவில் மலேசியாவில் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி நேற்று (ஜூலை 15) இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும்விதமாக யுவனுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனும் கலந்துக் கொண்டார்.
மிக பிரம்மாண்டாக நடந்த இந்த நிகழ்ச்சியில், யுவன் இசையில் தான் பாடிய பல பாடல்களை பாடி அசத்தினார் சிம்பு. பாடியதோடு மட்டும் அல்லாமல் மேடையில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆட ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.
https://twitter.com/Zaara_writes/status/1680307679636627456?s=20
மன்மதன் படத்தில் இருந்து ’தத்தை தத்தை தத்தை’, வல்லவன் படத்திலிருந்து ’யம்மாடி ஆத்தாடி’, ’லூசு பெண்ணே’
https://twitter.com/SathamSTR_/status/1680234811301191680?s=20
சிலம்பாட்டம் படத்தில் இருந்து ’வேர் இஸ் த பார்ட்டி’ போன்ற பாடல்களை பாடி நடனமும் ஆடினார்.
https://twitter.com/CaddictsCw/status/1680413379977170944?s=20
ஒவ்வொரு பாடலிலும் சிம்புவின் குரலும், நடன அசைவுகளும் ரசிகர்களை கவர யுவனின் நேற்றைய இசைநிகழ்ச்சி முழுவதும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது என்றே சொல்லலாம்.
மேலும் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் STR48 எனப்படும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சிம்பு, அந்த படத்தின் கெட்டப்பிலேயே வந்ததும் அங்கிருந்த ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.
கிறிஸ்டோபர் ஜெமா
விம்பிள்டன் பட்டத்துடன் ரூ.25 கோடி பரிசு: வோன்ட்ரோசோவா சாதனை!
சந்திரயான் 3 விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது? : அப்டேட் கொடுத்த இஸ்ரோ!