சிம்பு நடிப்பில் இன்று (மார்ச் 30) ”பத்துதல” படம் வெளியானது. மேலும் ட்விட்டரில் #pathuthala ஹேஷ்டேக் டிரண்டிங்கில் உள்ளது.
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த பத்து தல படம் உருவாகியுள்ளது. பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னட மொழியில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக “பத்து தல” உருவாகியுள்ளது.
ரீமேக் படமாக இருந்தாலும், புதிய காட்சிகளைத் தமிழில் இயக்குநர் சேர்த்திருக்கிறார் என்பது டிரெய்லரில் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் அடுத்த படத்திற்காகக் காத்திருந்த அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ”பத்து தல” இன்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே காலை 4 மணிக்கு அதிகாலை முதல் காட்சி திரையிடப்படும். ஆனால் பத்து தல படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் திரையரங்கு வாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பேனர் வைத்து, கட் அவுட்களுக்கு மாலை அணிவித்து ரசிகர்கள் படம் வெளியாவதைக் கொண்டாடினர்.
தொடர்ந்து படம் வெளியானது. படம் குறித்த கருத்துகளை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா
ஓபிஎஸ் மேல்முறையீடு: இன்று விசாரணை!
நீலகிரி கோடை விழா: எந்தெந்த தேதிகளில் என்னென்ன கண்காட்சிகள்?
அதிமுக – பாஜக கூட்டணி: அமித்ஷா சொன்னது என்ன?