சைமா விருதுகள் 2022 எப்போது தெரியுமா?

சினிமா

தென்னிந்தியத் திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் பொருட்டு சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னட மொழி சினிமா கலைஞர்களை அங்கீகரிக்கும் மேடையாக சைமா விருதுகள் கருதப்படுகிறது.

மூத்தக் கலைஞர்களாலும், சினிமா நடுவர்களாலும் இந்த விருதானது சரியான நபர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் சைமா விருதும் ஒன்று. கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் சைமா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, என ஒவ்வொரு மொழியிலும் சிறந்த திரைப்படம்,  இயக்குனர், நடிகை, நடிகர், இசையமைப்பாளர், துணை கதாபாத்திரங்கள் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்படுகின்றன.

alt="siima awards 2022 announcement"

இந்தநிலையில், இந்த ஆண்டு சைமா விருதுகள் அடுத்த மாதம் செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறுவதாக சைமா அறிவித்துள்ளது.

சைமா விருதுகள் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவானதால் இந்த ஆண்டு நடைபெறும் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தெந்த திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

செல்வம்

லால் சிங் சத்தா – கதை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *