இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் ‘ மிஸ் யூ ‘ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிக்கும் ‘ மிஸ் யூ ‘ திரைப்படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ சொன்னாரு நைனா ‘ அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் நகைச்சுவைக் கலந்து தயாராகியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். ரோகேஷ் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
‘ மாப்ள சிங்கம் ‘ , ‘ களத்தில் சந்திப்போம் ‘ போன்ற படங்களை இயக்கிய ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ டம டமா ‘ என்கிற பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் ஆஷிகா ரங்கநாத், ஜே.பி, பொன்வண்ணன், நரேன், பாலசரவணன், கருணாகரன், மாறன் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடிகர் சித்தார்த் தற்போது புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகும் ‘ டெஸ்ட் ‘ , ‘ 8 தோட்டாக்கள் ‘ படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி வழக்கு : தனியார் வங்கி மேலாளரிடம் குறுக்கு விசாரணை!
Share Market : காஃபி டே எண்டர்பிரைசஸ் லிமிடெட் மீது திவால் நடவடிக்கை… ஏன்?
3 டிகிரி முத்துக்காளை…மகனின் பள்ளியில் ஏற்பட்ட அந்த அவமானம்… என்ன நடந்தது?