‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது கன்னட அமைப்பாளர்கள் உள்ளே புகுந்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார்.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக்கூடாது என்று கன்னட அமைப்பினர் போராடி வருகின்றனர். நேற்று முன் தினம் கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தினர். இந்நிலையில் நாளை மீண்டும் மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்படவுள்ளது.
இந்தசூழலில் இன்று பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
நடிகர்கள் சித்தார்த், நிமிசா ஷஜயன் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியான படம் சித்தா. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்த போது திடீரென நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டனர்.
“உங்கள் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளுங்கள், காவிரி நீர் பிரச்சினை நடந்துகொண்டிருக்கும் போது இதெல்லாம் தேவையா? இந்த நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள்” என்று கோஷம் எழுப்பினர்.
இதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சித்தார்த் இறுதியில் தனது இருக்கையில் இருந்து எழுந்து பத்திரிகையாளரளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பாதியிலேயே கிளம்பினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Siddharth has been forced to leave the #Chithha press meet which happened at Karnataka due to the ongoing Cauvery issue !!
Worst behaviour 🙁👎pic.twitter.com/DJHdzb3VJM— AmuthaBharathi (@CinemaWithAB) September 28, 2023
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா
பாஜகவுடன் கூட்டணியா? : ஓ.பன்னீர் செல்வம் பதில்!
பாஜக அதிமுக கூட்டணி முறிவு : அண்ணாமலை முக்கிய அறிவிப்பு!