காதல் மஹாசமுத்திரத்தில் சித்தார்த்-அதிதி ராய்?

Published On:

| By Aara

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அதிதி ராய்.
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின், ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்
தமிழ் சினிமாவில், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதிலும், சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பதிவுகளை வெளியிட்டு அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும்
நடிகருமான சித்தார்த்தும், அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாகவும் வட இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இவர்கள் இருவரும் ‘மஹாசமுத்திரம்’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது காதலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவ்வப்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள ஹோட்டலில் இருந்து இவர்கள் வெளியே ஒரே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஆகிய இருவரும் தாங்கள் டேட்டிங் செய்வதாகவோ காதலிப்பதாகவோ இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

ஆனால் அதே நேரத்தில் சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதிராவ் ஹைத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel