தெலுங்கு முன்னணி நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு, டிசம்பர் மாதம், இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் வெளியான படம், ஷியாம் சிங்கா ராய்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு மைக்கே ஜே.மேயர் இசையமைத்திருந்தார்.
மறுபிறவி எடுக்கும் ஓர் எழுத்தாளனின் கதையாக உருவான இப்படத்தில், நானி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் மிரட்டியிருந்தனர்.
நானி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவர்களுடன் கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் ஆகியோரும் நடித்திருந்தனர்.
குறிப்பாக, இப்படத்தில் நடித்திருந்த சாய், நடனத்திலும் தனி முத்திரை பதித்திருந்தார். பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இந்த நிலையில், ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
சூர்யாவைப் பார்த்து உறைந்து போனேன்: சாய் பல்லவி