shruti hassan's the eye movie

ஸ்ருதி ஹாசனின் “The Eye”: குவியும் விருதுகள்!

சினிமா

நடிகை ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் தற்போது சில காலமாக அதிக படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹாசன் சர்வதேச திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி அதற்கான படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. “The Eye” என பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஸ்ருதி ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். The Eye படத்தை டாப்னே ஷ்மோன் (Daphne Schmon) இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக “The Lost Kingdom” புகழ் நடிகர் மார்க் ரவுலி (Mark Rowley) நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு எமிலி கார்ல்டன் (Emily Carlton) திரைக்கதை எழுதியுள்ளார்.

“ஒரு இளம் விதவைப் பெண் தன் கணவன் இறந்த பிறகு அவரது சாம்பலை, கணவன் இறந்த தீவில் தூவுவதற்காக செல்கிறாள்” என்ற ஒன்லைனை மையமாக கொண்டு The Eye படம் உருவாக்கப்பட்டுள்ளது.

shruti hassan's the eye movie

தற்போது இந்த படம் குறித்து ஒரு தகவலை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த தகவல் என்னவென்றால், Greek International Film Festival- இல் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளுக்கும், London Independent Film Festival- இல் சிறந்த படத்திற்கான விருதிற்கும் “The Eye” படம் தேர்வாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சில நேரங்களில் நீங்கள் ஒரு மேஜிக்கலான, எமோஷனலான, உண்மையுள்ள விஷயத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள்… எனக்கு அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இந்த “The Eye”… நீங்கள் அனைவரும் இந்த படத்தைப் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தூய்மை பணி : குப்பைகளை அள்ளிய பிரதமர், ஆளுநர், முதல்வர்கள்!

அம்மா முதல் அண்ணன் வரை… அதிமுகவின் புதிய மாசெ ஜெயசுதா பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *