ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில், சமந்தா நடிப்பில் சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படம் உருவாகப் போவதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது.
தற்போது, நடிகை சமந்தா இந்த படத்திலிருந்து விலகி விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயோசிட்டிஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதால் தான் சமந்தா இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு பதிலாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்தில் ஒப்பந்தமானது குறித்து ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட செய்தியில், “நான் சென்னை பெண்ணாக இருப்பதால் சென்னையின் தனித்துவத்தை சர்வதேச அளவில் காட்டப் போகும் இந்த படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு டிமெரி என். முராரி எழுத்தில் வெளியான “தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்” என்ற நாவலை அடிப்படையாக கொண்டு தான் சென்னை ஸ்டோரி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ ஆகிய நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே நடிகை ஸ்ருதிஹாசன் சர்வதேச படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம்: ஹீரோ இவரா?
ரஷ்ய போர் விமான விபத்து: 65 உக்ரைன் கைதிகள் பலி!