நடிகை ஸ்ருதிஹாசன் தான் சிங்கிளாகதான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
விஜய்யுடன் புலி, அஜித் குமாருடன் வேதாளம், விஷாலுடன் பூஜை , தனுஷுடன் 3 என பல முன்னணி நடிகர்களுடன் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
வால்டர் வீரய்யா, வீரசிம்கா ரெட்டி உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார்.
ஸ்ருதிஹாசன் டூடுல் கலைஞரும், ஓவியருமான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் வீடு எடுத்து லிவிங் டுகெதரில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து விட்டனர்… தனித்தனியாக வசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியானது.
இந்த சூழலில் ஸ்ருதிஹாசன் நேற்று (மே 24) இன்ஸ்டாகிராமில் லைவ் செய்தார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்த அவரிடம், “நீங்கள் சிங்கிளா… கமிட்டடா…” என ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஸ்ருதி, “இந்தக்கேள்விக்கு பதிலளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லைதான். ஆனால், நான் இப்போது சிங்கிளாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன்.
என்னுடைய வேலையை மட்டும் கவனித்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக்கொண்டிருக்கிறேன்… போதுமா” என்று பதிலளித்துள்ளார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை… இன்றைய விலை எவ்வளவு?
share market: வாரக் கடைசி வர்த்தக நாள்… வாரிக் கொடுக்கும் பங்குகள்!
22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் : பழிவாங்கும் நடவடிக்கையா?
கோல்டன் விசா… ரஜினியை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம் – இதுவரை பெற்றவர்கள் யார் யார்?