நரிக்குறவர் மக்களை ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்க மறுத்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இன்று (மார்ச் 31) வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிலம்பரசன் நடித்த ’பத்து தல’ படத்தை நேற்று ரோகிணி திரையரங்கில் பார்க்க சென்ற நரிக்குறவ மக்களை அங்கு பணியாற்றும் காவலாளி மற்றும் காசாளர் திரையரங்கிற்குள் அனுமதிக்க மறுத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து நரிக்குறவ மக்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் காசாளர் ராமலிங்கம், காவலாளி குமரேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு முன்னிலையில் இன்று நேரில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தநிலையில், நரிக்குறவ மக்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படாதது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் எஸ்.பி மகேஷ்வரன் தலைமையில் பாதிக்கப்பட்ட நரிக்குறவ மக்கள் மற்றும் திரையரங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.
செல்வம்
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஏப்ரல் 3-க்கு ஒத்திவைப்பு!
கலாஷேத்ரா பாலியல் புகார்: மகளிர் ஆணையம் விசாரணை!