Suriya Unveils Latest kanguva Look

முடிந்தது ஷூட்டிங் : லேட்டஸ்ட் கங்குவா லுக் வெளியிட்ட சூர்யா

சினிமா

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல்,கோவா, தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

ஒரு வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகும் கங்குவா படம் 38 மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. கங்குவா படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கங்குவா படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் சென்னை ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றபோது படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சூர்யா காயம் அடைந்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா கங்குவா படத்தில் தனது காட்சிகள் அனைத்து நிறைவடைந்து விட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”கங்குவாவுக்கு என் கடைசி ஷாட் நிறைவடைந்தது. இது ஒன்றின் முடிவு மற்றும் பலவற்றின் ஆரம்பம்..! அனைத்து நினைவுகளுக்கும் என் அன்பான இயக்குனர் சிவாவுக்கும் படக் குழுவினருக்கும் நன்றி! கங்குவா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் கங்குவா கெட்டப்பில் உள்ள ஓர் புகைப்படத்தையும் நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.

கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பாபி தியோல் நடிக்கின்றார். வரும் ஏப்ரல் மாதம் கங்குவா படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

விலகிய வேகத்தில் புதிய கட்சியில் சேர்ந்த அம்பத்தி ராயுடு : ஏன்?

காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!

தெய்வம் தந்த வீடு… வீதி இருக்கு: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *