மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து ‘சிவோஹம்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று(ஏப்ரல் 12) வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பொன்னியின் செல்வன்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான அகநக பாடல், இரண்டாம் சிங்கிள் பாடலான வீரா ராஜ வீரா, மற்றும் ட்ரெய்லர் போன்றவை அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து.. தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
ரகுமானின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்த பாடல்,’சிவோஹம்’ என்ற வரிகளுடன் தொடங்குகிறது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
துப்புரவு பணியாளர் டூ கிரிக்கெட் வீரர்: யார் இந்த ரிங்கு சிங்?
தமிழில் சி.ஆர்.பி.எப் தேர்வு: மத்திய அரசு மறுப்பு?