தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை தமன்னா. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடியது மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார்.
ஹிந்தி வெப் சீரியஸ், படங்கள் என தொடர்ந்து ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தமன்னா, தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த ‘ஷிஷீடோ’ (Shiseido) என்ற அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் இந்திய தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதரும் நடிகை தமன்னா தான்.
இது குறித்து நடிகை தமன்னா கூறியதாவது, “ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அழகில் சிறந்து விளங்குவதற்கான தரத்தை தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ பிராண்டுடன் இணைந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
புதுமை, தரம் மற்றும் தனித்துவத்தைக் கொண்டாடுவதில் ஷிஷீடோவின் அர்ப்பணிப்பு, தனிப்பட்ட அளவில் என்னுடன் எதிரொலிக்கிறது.
அழகு என்பது வெளிப்புற தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, உங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது பற்றியது என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: அன்பில் மகேஷ்