நடிகை குஷ்பூ ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தினமும் ஒரு ஐஸ்கிரீம்தான் அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர்.
இதற்கு, ஆசைப்பட்டு குஷ்பூ சிறுவயதில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன்முதலில் வருஷம் 16 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1989-ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் பாசில் இயக்கத்தில் இந்த படம் வெளிவந்தது.
தற்போது, குஷ்பூ தமிழ்ப்படத்தில் அறிமுகமானது குறித்து கண்டதும் கேட்டதும் யூடியூப் சேனலுக்கு மலையாள துணை இயக்குனர் ஆலப்புழா அஸ்ரப் சில விஷயங்களை கூறியுள்ளார். குஷ்பூ குறித்து அவர் பேசுகையில், “இந்த படத்தில் கார்த்திக் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார். புதுமுகம் ஒருவரை ஹீரோயினாக அறிமுகம் செய்ய பாசில் யோசித்தார். அப்போது, மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவர்தான் குஷ்பூ பற்றி பாசிலிடத்தில் கூறியுள்ளார். உடனடியாக, குஷ்பூவை அழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்தனர்.
ஆனால், மேக்கப்பில் சீன பெண்கள் மாதிரி குஷ்பூ இருந்ததாக சுற்றிருந்தவர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதே வேளையில், குஷ்பூவின் நடிப்பு பாசிலை மிகவும் கவர்ந்துள்ளது. பாசில்தான் குஷ்பூவை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறி விடாப்பிடியாக அந்த படத்தில் ஹீரோயினாக களம் இறக்கினார். குஷ்பூ பாசிலின் நம்பிக்கையை ஏமாற்றவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
1989-ஆம் ஆண்டு வெளியான வருஷம் 16 படத்தில் அறிமுகமான குஷ்பூவை சின்னத்தம்பி படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஹீரோயினாக மாற்றியது. பல வருடங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக அவர் வலம் வந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு: சென்னை மக்களுக்கு அலர்ட்!
செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை பாதிப்பு… உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை!