ஜனவரி 25 அன்று ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 1100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனை சமன் செய்யும் வகையில் இதுவரை வெளியான வேறெந்த இந்திய படங்களும் வசூல் செய்யவில்லை.
பதான் நிகழ்த்திய சாதனையை ஜவான் சமன் செய்து முன்னேறுமா என்கிற எதிர்பார்ப்பு ஷாருக்கான், இயக்குநர் அட்லி தரப்பில் ஏற்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் வெளியான தமிழ் படங்கள் 500 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. முதன்முறையாக அவரது இயக்கத்தில் வெளியான ஜவான் 800 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்திருக்கிறது.
இதன் மூலம் அவரது குருநாதர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் 730 கோடி ரூபாய் மொத்த வசூலை முறியடித்திருக்கிறார்.
அதேபோன்று ஷாருக்கான் நடிப்பில் ஒரே வருடத்தில் வெளியான பதான் ரூ. 1000 ம் கோடி வசூலை கடந்தது போல, ஜவான் 1000 ம் கோடி ரூபாய் வசூலை கடந்தால் இந்திய நடிகர்களில் சாதனையாளராக வரலாற்றில் இடம் பெறுவார்.
இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜவான்’ திரைப்படம், வெளியான 12 நாட்களில் ரூ. 883.68 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக நேற்று மாலை அறிவித்துள்ளது.
‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூல் செய்த முதல் இந்தி படம் என்று தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இரண்டாவது நாளில் இப்படம் 240 கோடி ரூபாயும் மூன்றாவது நாள் 384.69 கோடி ரூபாயும் ஆகமொத்தம் 5 நாட்கள் முடிவில் 574.89 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஜவான் 12 நாட்களில் 883.68 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இராமானுஜம்
லைகா வழக்கு : விஷாலுக்கு உத்தரவு!
சென்னை – நெல்லை வந்தே பாரத் எப்போது?
மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்த 8 ஆண்டுகளா?: சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சோனியா காந்தி தலைமையில் இன்று விவாதம்!