ஷாருக்கானின் செம டான்ஸ்: ‘டன்கி’ அடுத்த அப்டேட்!

Published On:

| By Monisha

sharukhan in dunki

பிரபல ஹிந்தி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ‘டன்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. Dunki Drop 1 என்று பெயரிடப்பட்ட அந்த டீசரின் முடிவில் Dunki Drop 2 அப்டேட் கூடிய விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நவம்பர் 22ஆம் தேதியான  Dunki Drop 2 அப்டேட் வெளியாகியுள்ளது. Dunki Drop 2 அப்டேட்டாக “Lutt Putt Gaya” என்ற பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது டன்கி படக் குழு. “Lutt Putt Gaya” பாடல் வீடியோவில் ஷாருக்கானின் நடனம் அட்டகாசம்.

’டாங்கி பிளைட்’ மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் ஷாருக்கானின் டன்கி படம் உருவாகியுள்ளது.

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி டன்கி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாருக்கானுக்கு போட்டியாக பிரபாஸின் சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போது Dunki Drop 2: “Lutt Putt Gaya” பாடல் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

விபத்தில் உயிரிழந்த செய்தியாளர்: முதல்வர் நிதியுதவி!

மன்சூர் அலிகான் தலைமறைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel