sharukhan dunki drop 3

’டன்கி Drop 3’: ஷாருக்கானின் எமோஷனல் பாடல் ரிலீஸ்!

சினிமா

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் பிரபல ஹிந்தி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் “டன்கி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

டாங்கி பிளைட் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் ஷாருக்கானின் டன்கி படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் Dunki Drop 1 அப்டேட் என்ற பெயரில் டன்கி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து Dunki Drop 2 அப்டேடாக “Lutt Putt Gaya” என்ற பாடல் வீடியோ வெளியானது.

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி டன்கி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது Dunki Drop 3 அப்டேடாக “Nikle The Khabi Hum Ghar Se” பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது Dunki Drop 3 பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

முதல்வரின் நிகழ்ச்சிகள் 3 நாட்கள் ஒத்திவைப்பு?

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *