நாளை (ஆகஸ்ட் 15 )ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் (ஆகஸ்ட் 13) முதல் (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர்.
அதேபோல் நடிகர்களும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர்.
அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் , விஜய் ஆகியோர் தங்கள் இல்லத்தில் நேற்று(ஆகஸ்ட் 13) தேசிய கொடி ஏற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் இன்று (ஆகஸ்ட் 14) குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார்.
பின்னர் தேசியக் கொடி முன்பு ஷாருக் கான், அவரின் மனைவி கெளரி கான், மகன்கள் ஆர்யன் கான், அப்ராம் கான் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தேசியக் கொடியேற்றிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தேசியக் கொடி : செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!