இசைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதை வெல்வது என்பது ஒரு கனவாகவே உள்ளது. இசைத்துறையில் மிக முக்கியமான விருதாக கிராமி விருது கருதப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 66-வது கிராமி இசை விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பத்திற்கான பிரிவில், இந்தியாவை சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது.
பாடகர் சங்கர் மகாதேவன், கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், தாள கலைஞர் செல்வ கணேஷ், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலான் ஆகியோர் அடங்கிய சக்தி இசைக்குழு “திஸ் மொமண்ட்” எனும் 8 பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை உருவாக்கியிருந்தனர்.
சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளதற்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிப்ரவரி 12-ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: என்ன காரணம்?
ஜார்க்கண்ட்: சம்பாய் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!