நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை அருகில் இருந்து நடிகர் அஜித்குமார் கவனித்து கொள்கிறார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக அஜித்குமார் – ஷாலினி உள்ளனர்.
அஜித்குமார் கார், பைக் ரேஸ், படப்பிடிப்பு என பிஸியாக இருந்தாலும், குடும்பத்துக்காக எப்போதும் நேரம் ஒதுக்கி வருகிறார்.
அண்மையில் தனது மகனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார்.
தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தை கையில் வைத்து இருக்கும் அஜித்குமார், விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த அஜித் திடீரென நேற்று சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் ஷாலினி இன்று(ஜூலை 3) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லவ் யூ ஃபார்யெவர்” என்று குறிப்பிட்டு அஜித்தின் கையை பிடித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான டேகை கையில் கட்டியவாறும், மருத்துவமனை கவுன் அணிந்தவாறும் இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாலினிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் ஷாலினிக்கு ஒரு மைனர் சர்ஜரி நடந்திருப்பதாகவும், அவரை கவனித்து கொள்ளவே படப்பிடிப்பில் இருந்து அஜித் திரும்பியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஆனால் ஷாலினிக்கு என்ன ஆனது என அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அஸ்தானாவில் நடக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு!!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : 29.7% மெத்தனால் கலப்பு… அரசு தகவல்!