“குறுகிய பார்வை” : தீபிகா ஆடை சர்ச்சை குறித்து ஷாருக்

சினிமா

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவற்றை புறக்கணிக்க சொல்லி ட்விட்டரில் டிரெண்ட் செய்வது தொடர் நிகழ்வாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், தீபீகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ படமும் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘பேஷ்ரம் ரங்’ என்ற பாடல் வெளியானது.

இதில் தீபிகா பிகினி உடையில் நடனம் ஆடியது, அவர் அணிந்த காவி நிற நீச்சல் உடை, ‘பேஷ்ரம் ரங்’ என்ற வார்த்தையின் அர்த்தம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி,

இது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக கூறி இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதான் படத்தை திரையிட விட மாட்டோம் என வட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

பாஜக ஆளும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் இந்த படத்தை திரையிட மாநில அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் ஷாரூக்கானின் உருவ பொம்மையையும், அவரின் போஸ்டரையும் எரித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்து மத தலைவர்களும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ் கூறுகையில்,

‛‛காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் என்ன. வேண்டுமென்றே இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக எடுக்கப்படும் இதுபோன்ற படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Shahrukh on Deepika's dress controversy

இந்த படம் எங்கு திரையிடப்பட்டாலும் தியேட்டரை தீயிட்டு கொளுத்துவோம்” என கூறியுள்ளார்.

இந்த நிலையில்  28வது சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் 14.12.2022  மாலை துவங்கியது.

இதில் கலந்து கொண்டு ஷாரூக்கான், ‛‛நமது காலம் இப்போது சமூக வலைதளங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சினிமாவை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் இப்போது சினிமாவின் பங்கு இன்னும் முக்கியத்துவம் பெறும் என நம்புகிறேன்.

சமூகவலைதளங்கள் பெரும்பாலும் குறுகிய பார்வையுடன் கீழ்த்தரமாக செயல்படுகின்றன. எதிர்மறை விஷயங்கள் அதிகமானால் அது வணிக தரத்தை உயர்த்தும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் அழிவுப்பாதைக்கு தான் வழிவகுக்கும்.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், செய்யட்டும். நானும், நீங்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நேர்மறையான மனிதர்களும் உயிருடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் பேசியுள்ளது வட மாநிலங்களில் பதான் படத்திற்கு எதிராக இந்து அமைப்புகளும், ஆளும் பாஜக அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை விமர்சிப்பதாக கூறப்படுகிறது.

இராமானுஜம்

காசி தமிழ் சங்கமம் நிறைவு: மோடியின் மிகப்பெரிய முயற்சி-அமித்ஷா புகழாரம்!

கிச்சன் கீர்த்தனா : டோக்ளா

உக்ரைன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம்  பிரதமர் மோடி வலியுறுத்தியது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *