ராஜ் மற்றும் டிகே தயாரிப்பில், க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள ஃபார்ஸி திரைப்படத்தில், ஷாஹித் கபூர் ,விஜய் சேதுபதி, கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிப்ரவரி 10 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள 240 நாடுகளில் அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
மிகப்பெரிய வெற்றி கண்டு சாதனை புரிந்த தி ஃபேமிலி மேன் திரைப்படத்தை உருவாக்கிய மிகப்பிரசித்திபெற்ற படைப்பாளிகளின் அடுத்த உருவாக்கம்தான் ஃபார்ஸி திரைப்படம்.
ராஜ் & DK இன் தயாரிப்பு நிறுவனமான D2R ஃபிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட, இந்த நட்சத்திரக் கூட்டம் நிறைந்த தொடரானது, பாலிவுட்டின் மனம் கவர்ந்த ஷாஹித் கபூர் மற்றும் கோலிவுட்டின் மிகவும் அன்புக்குரிய நட்சத்திரமான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஆகியோர் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாக உள்ளனர்.
நகைச்சுவை காட்சிகள் அடங்கிய ஃபார்ஸி திரைப்படமானது எட்டு எபிசோட்களில் படமாக்கப்பட்டு அடுத்தடுத்து விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளால் நிறைந்தது.
செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு ஒரு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஒரு புத்திசாலித்தனமான தெருக்கலைஞனை சுற்றி இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது .
சீதா ஆர் மேனன் மற்றும் சுமன் குமார் இருவரும் ராஜ் & டிகே-யுடன் இணைந்து , ஃபார்ஸி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர்.
ஃபார்ஸி தொடர் நடுத்தர மக்களின் கனவுகள், அபிலாஷைகள் மற்றும் மனக்கலக்கம் நிறைந்த அவர்களின் வாழ்க்கைச்சூழலில் வேரூன்றிய உணர்வுகளோடு விலா எலும்புகளை நோக வைக்குமளவுக்கு சிரித்து மகிழவைக்கும் என்கிறார்கள்.
இரட்டையர்களான ராஜ் & டிகே படத்தை பற்றி கூறுகையில், “தி ஃபேமிலி மேனின் மிகப்பெரிய வெற்றிகரமான கூட்டணிக்குப் பிறகு, எங்களின் அடுத்த புதிய தொடருக்காக அமேசான் பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
இது எங்களுக்கு மிகவும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கதைகளில் ஒன்றாகும். அடிப்படையில் இந்த தொடரின் உருவாக்கம் அதிகளவில் வியர்வையையும் கண்ணீரையும் சிந்த வைத்திருக்கிறது.
தி ஃபேமிலி மேனுக்குப் பிறகு, மற்றொரு அற்புதமான, தனித்துவமான உலகத்தைக் கொண்டு வர எங்களுக்கு நாங்களே சவால் விட்டுக்கொண்டோம்.
பிரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் தொடரை பார்ப்பதற்காக நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.” என்றனர்.
விஜய் சேதுபதி நடித்திருக்கும் முதல் இணையத் தொடர் ஃபார்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல்- ஸ்டாலினுக்கு இரண்டு பரிட்சை!
சிரிக்காமல் போட்டோ எடுத்து கொண்ட செல்ஃபிபுள்ள சமந்தா