தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பாலிவுட் படங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.
அலி அப்பாஸ் சபார் இயக்கத்தில் ஷாகித், கபூர், சஞ்சய் கபூர், ரோனித் ராய், அங்குர் பாதியா உள்ளிட்டோர் நடித்த பிளடி டேடி திரைப்படம் இன்று (ஜூன் 9) ஜியோ சினிமாவில் வெளியானது.
இந்தநிலையில் பிளடி டேடி திரைப்படம் குறித்து ஷாகித் கபூர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பாலிவுட் படங்களை பார்க்க வேண்டும்.
பாலிவுட் ரசிகர்கள் தென்னிந்திய திரைப்படங்களை ஏற்றுக்கொள்வது போல நீங்களும் பாலிவுட் திரைப்படங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் சினிமா வளர்ச்சி அடையும்.
சினிமா ரசிகர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் அதிக ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள்.
கொரோனா காரணமாக பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படங்களை வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு செய்ய முடியாமல் போனது. இருப்பினும் பாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்கள் சல்மான் கான், அக்ஷய்குமார், அமீர் கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறந்த ஆக்ஷன் கதைகளில் நடித்து வருகின்றனர்:” என்று தெரிவித்தார்.
செல்வம்
“ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்
பைக் டாக்சிக்கு அனுமதியா? அமைச்சர் சிவசங்கர் பதில்!