“ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படத்தின் பாடல் காட்சி ஒன்று இந்துக்களை கேவலப்படுத்துவதாக உள்ளது. அதனால் அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும்” என பாரதிய ஜனதா கட்சி, இந்து மத தீவிரவாத தலைவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில் லண்டனைத் தலைமையிடமாக கொண்டு வெளியாகும் ‘எம்பயர்’ இதழில் சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்டுள்ள 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
லண்டனிலிருந்து வெளிவரும் பிரபலமான ‘எம்பயர்’ மாத இதழ் சர்வதேச அளவில் அனைத்து காலக்கட்டத்திலும் பிரபலமான, ஆளுமை திறன்மிக்க, மக்களால் போற்றப்படும் சிறந்த 50 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சமூகத்தில் பிரபலமான நடிகர்களான மார்லன் பிராண்டோ, டாம் ஹாங்க்ஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட், டாம் குரூஸ், கிறிஸ்டியன் பேல், லியனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகர் ஷாருக்கான் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது.
எம்பயர் இதழில் ஷாருக்கான் பற்றிய குறிப்பில் திரைப்படங்களில் அவரின் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களையும் மேற்கொள்காட்டியுள்ளது.
அதன்படி, ‘தேவதாஸ்’ படத்தில் அவரின் தேவதாஸ் கதாபாத்திரத்தையும், ‘மை நேம் இஸ் கான்’ படத்தின் ரிஸ்வான் கான் பாத்திரத்தையும், ‘குச் குச் ஹோதா ஹை’ ராகுல் கண்ணா, ‘ஸ்வேட்ஸ்’ படத்தின் மோகன் பார்கவ் கதாபாத்திரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அதில், “நான்கு தலைமுறைகளாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஷாருக்கான் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நடிகர்” என புகழாரம் சூட்டியுள்ளது.
தொடர்ந்து, ‘கரீஷ்மாவும் திறமையுமில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. ஏறக்குறைய அனைத்து வகையான கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் அவரால் செய்ய முடியாதது என எதுவுமில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் உறைய வைக்கும் பனி: வாகன ஓட்டிகள் அவதி!
அவருக்கு மரியாதை கொடுங்கள்: ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த அப்ரிடி