நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் மிகச் சிறந்த நடிகராக கருதப்படுபவர். கோடிக்கணக்கான ரசிகர்களும் அவருக்கு உள்ளனர். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷாருக்கானுக்கு சொந்தமானதுதான். நவம்பர் 2 ஆம் தேதி அவருக்கு 59வது பிறந்த நாள் ஆகும்.
இதையடுத்து, ஷாருக்கான் தன் பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த தருணத்தில் தனது ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, ரசிகர்களிடம் பேசிய ஷாருக் கான், ஒரு நல்ல செய்தி இருப்பதாகக் கூறி புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஷாருக் கூறுகையில், புகைபிடிப்பதைக் கைவிட்ட பிறகு மூச்சுத்திணறல் குறைவாக இருக்கும், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் அதுவும் சரியாகிவிடும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
சில வருடங்களுக்கு முன்ப, ஷாருக் கான், ” ஒரு நாளைக்கு 100 சிகரெட் பிடிப்பேன். சாப்பிட கூட மறந்து விடுவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டு தனது குழந்தைகளுக்காக மது, சிகரெட் குடிப்பதை நிறுத்தப் போகிறேன். எனது குடும்பத்தினர் தன் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கின்றனர் என்றும் ஷாருக் கூறியிருந்தார்.
2012 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்த போட்டியின் போது, மைதானத்திலேயே ஷாருக்கான் சிகரெட் பிடித்தது சர்ச்சையானது. இதையடுத்து, ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ரூ .100 அபராதம் செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டெபாசிட் போனது மட்டும் 1 கோடி… 245 வது முறையாக களம் இறங்கும் பத்மராஜன்
குடலில் ஒரு சொட்டு பருக்கை இல்லை… மைனர் பணிப்பெண் கொலையில் வெளியான அதிர்ச்சி தகவல்!