ஜவான் திரைப்படத்தில் இடம்பெற்ற ராமய்யா வஸ்தாவையா பாடல் டீசரை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜவான் படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்து வருகின்றன.
அந்தவகையில் ‘வந்த எடம்’, ‘ஹய்யோடா’ பாடல்கள் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் தற்போது ஜவான் படத்தின் மூன்றாவது பாடலான ‘ நாட் ராமய்யா வஸ்தாவையா’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த பாடல்கள் மியூசிக் சார்ட்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஷாருக்கான் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஜாவான் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த நாட் ராமய்யா வஸ்தாவையா பாடலின் டீசரை வெளியிடும் நேரமிது. உங்களுக்காக இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லீ ஆகியோர் பாடலின் டீசரை தந்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இது ஒரு பொழுதுபோக்கு பாடலாக இருக்குமென்பதை உறுதியளிக்கிறது. ரசிகர்கள் நாட் ராமய்யா வஸ்தாவையா பாடலை கொண்டாடி வருகின்றனர்.
இராமானுஜம்
சென்னை அண்ணா சாலையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!
ஒயின் உற்பத்தியாளர்களைக் காக்க ரூ.1700 கோடி செலவிடும் நாடு!
ராகவா லாரன்ஸுக்கு லைகா கொடுத்த பரிசு!
டிஜிட்டல் திண்ணை: மாநாடு முடிந்து துணை முதல்வராகும் உதயநிதி