ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் காட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வரும் நிலையில் பாலிவுட்டின் சாதனைகளை இந்தப்படம் முறியடிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் இந்தப்படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர். கெளரவ வேடத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.
மேலும் இந்த படம் இந்த வருடம் ஜூன் 2 ஆம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் தற்போது ஷாருக் கானின் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நீல நிற உடையில் தோற்றமளிக்கும் ஷாருக்கான் வெள்ளை நிற பெல்ட்டால் எதிரிகளை அடிப்பது போல் உள்ளது. இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அதிகளவில் இந்த வீடியோவை ஷேர் செய்வதுடன் பாலிவுட்டில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாட்டிக்காக கொள்ளையனுடன் சண்டை போட்ட 10 வயது சிறுமி!
ஆன்லைன் ரம்மி நிறுவனம் கோரிக்கை: ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்!