பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களுமே 1000 கோடி ரூாய்க்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்தது.
ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் பிரபல ஹிந்தி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் “டன்கி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு மற்றும் நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். “டாங்கி பிளைட்” மூலம் சட்டவிரோத குடியேற்றத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் ஷாருக்கானின் டுங்கி படம் உருவாகியுள்ளது.
இன்று (நவம்பர் 2) ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு டன்கி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் ஷாருக்கானின் யங் லுக் அட்டகாசம், இந்த படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரத்தின் பெயர் ஹார்டி (Hardy), டாப்ஸி கதாபாத்திரத்தின் பெயர் மனு (Manu), விக்கி கௌசல் கதாபாத்திரத்தின் பெயர் சுக்ஹி (Sukhi). இந்த டீசருக்கு Dunki Drop 1 என்று பெயரிடப்பட்டுள்ளது அதேபோல் டீசரின் முடிவில் Dunki Drop 2 டீசர் கூடிய விரைவில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் ஷாருக்கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இணைந்து பணியாற்றும் முதல் படம் என்பதால் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் டன்கி படமும் இடம்பெற்றிருந்தது. மேலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் மற்றொரு படமான பிரபாஸின் சலார் படமும் ஷாருக்கானின் டன்கி படமும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.
தற்போது டன்கி படத்தின் டீசர் வைரலாக தொடங்கியுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…