இந்திய சினிமாவில் தொடரும் ஷாருக்கான் சாதனைகள்!

சினிமா

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களை பார்வையாளர்கள் பார்க்கும் எண்ணிக்கை, சமூக வலைதளங்களில் அவற்றின் தாக்கம் இவைகளை அடிப்படை தரவுகளாக கொண்டு தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி எனும் இணையதளம் வெளியிட்டு வருகிறது.

இந்த தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெறுவதை திரைப்பட துறையினர், ஓடிடி தளங்கள், தெலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் கௌரவமாக கருதுகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை இந்தியாவில் வெளியான படங்களின் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளனர்.

அதன்படி தியேட்டர்களில் வெளியான படத்தில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ படம் முதலிடத்திலும் இந்த வருட தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் இரண்டாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் 4வது இடத்தையும், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
தியேட்டரில் வெளியான படங்கள் பட்டியல்!
1. ஜவான்
2. பதான்
3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி
4. லியோ
5. ஓஎம்ஜி 2
6. ஜெயிலர்
7. கடார் 2
8. தி கேரளா ஸ்டோரி
9. தூ ஜூதி மெயின் மக்கார்
10. போலா
ஓடிடியில் வெளியான படங்கள்!
1. திலாஸ்ட் ஸ்டோரி 2
2. ஜானே ஜான்
3. மிஷன் மஜ்னு
4. பவால்
5. சோர் நிகல் கே பாகா
6. ப்ளடி டாடி
7. சிர்ப் ஏக் பண்டா காபி ஹை
8. கேஸ்லைட்
9. தி ஜாக்புர்ட் மிஸ்ட்ரி
10. மிசஸ் அண்டர்கவர்
ஜவான் படம் ஏற்கனவே இந்தி சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமா பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதல் இடத்தில் உள்ளது. தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான், பதான் படங்களே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *