ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷபானா. தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை அள்ளிக் குவித்தார்.
வெற்றிகரமாக ஓடிய செம்பருத்தி சீரியல் 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகை ஷபானா தனது காதலரான நடிகர் ஆரியனை கரம் பிடித்தார்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாயினும் பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘மிஸ்டர் மனைவி’ என்ற என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இந்த சீரியலும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்தநிலையில் ஷபானா வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அதில் அவர்,”நிறைய யோசித்து ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளேன். மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுகிறேன். இது அவ்வளவு சுலபமல்ல. ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்.
என்னை அஞ்சலியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. எனது திறமையை வெளிக்காட்டும் நல்ல ரோல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சீக்கிரமே வேறு ஒரு ப்ராஜெக்ட் மூலம் உங்களை சந்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
மேலும் பலர் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகினார் என்று தெரிவித்து வந்தனர். அதற்கும் பதில் அளித்திருக்கும் ஷபானா, ” ஒரு முக்கியமான விஷயம் நான் கர்ப்பமாக இல்லை.
பலரும் என்னிடம் வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே அப்படி நடந்தால் அதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன்”, என்று விளக்கம் அளித்துள்ளார்.அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இபிஎஸ் ‘ரோடு ஷோ’ போக தயாரா?” – அண்ணாமலை சவால்!
Video: கல்லூரி சீனியருடன் இணைந்த பிரதீப்… யாருன்னு தெரியுதா?
விக்னேஷ் சிவன் வரிகளுக்கு ‘குத்தாட்டம்’ போடும் சந்தானம்