குழந்தை பிறந்த கையோடு… மீண்டும் ‘குட்’ நியூஸ் சொன்ன காயத்ரி… வாழ்த்தும் ரசிகர்கள்..!

சினிமா

சோசியல் மீடியா வளர்ந்த பிறகு சினிமா நடிகைகளைப் போலவே சீரியல் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றனர். தினந்தோறும் தாங்கள் செய்யும் வேலைகளை சோசியல் மீடியாவில் பதிவிடுகின்றனர்.

இதனால் ரசிகர்களும் அவர்களை ஆர்வமுடன், சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர். அந்தவகையில் நடிகை காயத்ரிக்கும் அறிமுகம் தேவை இல்லை.

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் யுவராஜ் என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். பின்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவரது கணவர் யுவராஜ் ஒரு நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரையில் ‘தென்றல்’ சீரியல் மூலம் அறிமுகமான காயத்ரி, அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, சித்தி 2, மீனாட்சி பொண்ணுங்க போன்ற பல தொடர்களில் பணியாற்றி உள்ளார்.

காயத்ரி-யுவராஜ் தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த கையோடு சொந்தமாக வீடு வாங்கி அசத்தினார்கள்.

தற்போது இவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். ஆம் சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை துவங்கியுள்ளனர். இந்த ஸ்டுடியோவின் துவக்க விழா வெகு விமரிசையாக நடந்துள்ளது.

இதில் நடன இயக்குனர் ராம்ஜி, நடிகர் ஆரி, புகழ், நடிகை பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வீடியோ வைரலாக இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

-பிரியங்கா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

தேர்தல் விதி மீறினால் 2 ஆண்டு சிறை : சத்யபிரதா சாகு

IPL 2024: எங்களோட ‘பிளானே’ இதுதான்… ‘சீக்ரெட்’ சொன்ன அதிரடி நாயகன்!

+1
7
+1
8
+1
4
+1
15
+1
4
+1
11
+1
9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *