சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி.
ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல தெலுங்கு சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்
தொடர்ந்து அஜித்தின் ‘வலிமை’ படத்தில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றி ஆச்சரியம் கொடுத்தார். சில வருடங்களுக்கு முன்னர் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது டிஆர்பியில் முதலிடத்தில் உள்ள ‘கயல்’ என்ற சீரியலில் சைத்ரா பிஸியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இரவு ஷூட்டிங்கை முடித்துவிட்டு காரில் சென்ற அவருக்கு, அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் கூறியிருப்பதாவது, “நேற்று இரவு எனக்கு அந்த மோசமான சம்பவம் நிகழ்ந்தது. பொதுமக்கள் இது பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இரவு ஒரு மணி இருக்கும் நான் ஷுட்டிங் முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தேன். போரூர் பகுதியில் டிடி சோதனை (DD Check) நடந்து கொண்டிருப்பதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன.
அப்போது சற்றும் எதிர்பார்க்காத விதமாக மேலே இருந்து ஒரு பெரிய சிமெண்ட் பகுதி வந்து விழுந்தது. பாலத்தின் மேல் நடந்து கொண்டிருந்த மெட்ரோ பணியின் அலட்சியத்தால் இது நிகழ்ந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவும் ஆகவில்லை. ஆனால் காருக்கு பெரிய செலவு வைத்து விட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் இருந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
மக்கள் உஷாராக இருக்கவும்”, என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விளம்பரத்தில் பாரபட்சமா? : தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதிய பிசினஸ் ‘ஆரம்பித்த’ அறந்தாங்கி நிஷா… குவியும் வாழ்த்துகள்!
Thalaivar 171: ரஜினிக்கு வில்லன் இவர்தான்… வேற லெவல் காம்போ!