சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் பரிதாப மரணம்… மகளின் உருக்கமான பதிவு!
பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் இன்று (டிசம்பர் 4) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக அவர் வலம் வந்தார். சீரியலில் நடித்த தீபா என்பவரை காதலித்தும் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
தாயான பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்காமல் இருந்த தீபா, அண்மையில் தான் மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். நேத்திரனின் மூத்த மகள் அபிநயா இளம் வயதில் தன்னுடைய தந்தையோடு இணைந்து சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
தற்போது, அபிநயா திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் தன்னுடைய தந்தை இப்பொழுது ஐசியூவில் இருப்பதாகவும், எல்லாம் கைமீறி போய் விட்டதாகவும்,
தனது தந்தைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவருக்கு புற்றுநோய் என்றும் கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேத்ரன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
நேத்ரனின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது. அவருடைய நண்பர்கள் பலரும் அவருடைய நினைவுகள், அவரை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் நேத்ரனின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இரட்டை இலை… ஓபிஎஸ் கருத்தையும் கேட்க வேண்டும்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
உத்தரப் பிரதேச வன்முறை… காசிப்பூர் எல்லையில் ராகுல், பிரியங்கா தடுத்து நிறுத்தம்!