’செம்பி’ பட வசனம்: மீடியாவிடம் சிக்கிய பிரபு சாலமன்

சினிமா

’செம்பி’ பட வசனத்தால் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குநர் பிரபு சாலமன்.

’மைனா’, ’கும்கி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன்.

இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் படம். ‘செம்பி’. இந்த படத்தில் நடிகை கோவை சரளா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது.

இதையடுத்து, சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கான ‘செம்பி’ படத்தின் சிறப்பு திரையிடல் காட்சி நடைபெற்றது.

இதன்பிறகு படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ”திரைப்படத்தின் இறுதியில் இயேசு கிறிஸ்துவின் போதனை குறித்து வசனம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மதப் பிரசாரம் செய்கிறீர்களா” என இயக்குனர் பிரபு சாலமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Sembi verse Prabhu Salomon Trapped by Media

அதற்கு அவர், “கிறிஸ்தவம் என்பது ஒரு மதமே கிடையாது. அதை, நான் ஒரு மதமாகப் பார்க்கவில்லை. மதத்தைப் பரப்ப இயேசு வரவும் கிடையாது. அன்பு மட்டுமே எங்களுடைய நோக்கம்.

அதைத்தான் எல்லோருக்கும் சொல்லி இருக்கிறோம்” எனத் தெரிவித்தவரிடம், “இதே போதனைகள் பகவத் கீதையிலும் இடம்பெற்றுள்ளதே” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ”அந்த போதனைகளைப் படித்து வளர்பவர்கள், அதைத் தங்கள் படங்களில் வைக்கலாம். நான் படித்து, வளர்ந்த விஷயங்களின் வெளிப்பாடுதான் எனது திரைப்படம்.

அதில் இடம்பெற்றது யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார், பிரபு சாலமன்.

ஜெ.பிரகாஷ்

பெற்றோரிடமே கடத்தல் நாடகம்: போலீசிடம் சிக்கிய இளம்பெண்!

நாற்காலிக்காக சண்டையிட்டுக் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *